×

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆட்டிப்படைகிறார்: இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன் ரணதுங்கா விமர்சனம்

இலங்கை: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆட்டிப்படைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெய் ஷா மீது இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பிசிசிஐக்கு அடிபணிந்து செல்வதாகவும் அர்ஜு ரணதுங்கா விமர்சனம் செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டை அழிக்கிறார் ஜெய் ஷா- அர்ஜு ரணதுங்கா

ஜெய் ஷாவின் அழுத்தம் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அழிக்கப்பட்டு வருவதாக அர்ஜுன ரணதுங்கா புகார் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்காவின் குற்றச்சாட்டால் கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அதிகாரத்தில் உள்ள ஜெய்ஷா, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நசுக்க முயற்சிக்கிறார். இந்தியாவில் உள்ள ஒரு மனிதர் இலங்கை கிரிக்கெட்டை அழித்து வருவதாக ஜெய் ஷா மீது அர்ஜுன ரணதுங்கா குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அவரது தந்தை அமித் ஷாவால் மட்டுமே ஜெய் ஷா சக்திவாய்ந்தவராக உள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை அடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அரசியல் தலையீட்டால் அண்மையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைநீக்கமும் செய்தது.

 

The post இலங்கை கிரிக்கெட் வாரியத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆட்டிப்படைகிறார்: இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன் ரணதுங்கா விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Cricket Board ,BCCI ,Jay Shah ,Arjun Ranatunga ,Sri Lanka ,Jai Shah ,Sri Lanka Cricket Board ,Dinakaran ,
× RELATED ராகுல் டிராவிட் விண்ணப்பிக்கலாம்: ஜெய் ஷா தகவல்